ankeyum appati than u.s.a oru paarvai
மரணம் அடைந்ததாக கருதப்பட்ட 18 லட்சம் பேர் உயிருடன் வாழ்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் சபைக்கான தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் “ப்யூ சென்டர்” என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஒவ்வொரு எட்டு பேரில் ஒருவரது வாக்காளர் பதிவு புதுப்பிக்கப்படாமல் அல்லது சரியான விவரம் இல்லாமல் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் இரண்டு கோடியே 40 லட்சம் பேரின் தகவல்கள் சரியாக பதியப்படவில்லை.
அத்துடன் மரணம் அடைந்த 18 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் உள்ளன. தகுதி வாய்ந்த அமெரிக்க குடிமக்கள் ஐந்து கோடியே 10 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. அதேபோல் 27 லட்சத்து 50 ஆயிரம் பேர் குறைந்தது இரு மாநில வாக்காளர் பட்டியல்களில் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு கோடியே 20 லட்சம் பேரின் விவரங்கள், முகவரி, இடம் மாறுதல், தகவல் தொடர்பு விவரம் போன்றவற்றில் சரியான தகவல்களோடு இல்லாமல் தவறுகளோடு பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் ஒரு கோடியே 27 லட்சம் பேரின் விவரங்கள் காலாவதியாகியுள்ளதோடு புதிய தகவல்கள் பதியப்படாமலும் உள்ளன.
இதுகுறித்து ப்யூ சென்டர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வாக்காளர் பதிவு என்பது நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்திலும் கூட 19வது நூற்றாண்டு பதிவு முறைகளையே கொண்டிருக்கிறது.
மிகச் சரியான, செலவை குறைக்க கூடிய, போதுமான தகவல்களை பதிவதற்காக, வாக்காளர் பதிவு முறை 21ம் நூற்றாண்டு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக